மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கண்டி, நாவலப்பிட்டியில் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான கயானி தில்ருக்ஷி குமாரி என்ற 46 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டுக்குள் ரகசிய புகுந்த கணவன் படுகொலை செய்ததாக, மகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப முரண்பாடுகள்
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையில் முரண்பாடுகள் காரணமாக சில காலம் பிரிந்திருந்த நிலையில் இன்று அதிகாலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற மகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரச்சனையில் சிக்கிய சோழன்.. மனைவியாக துணை நின்று நிலா காப்பாற்றுவாரா? அய்யனார் துணை புரோமோ வீடியோ Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri