வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்: கொடூரமாக கொல்லப்பட்ட இளம் மனைவி
குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.
இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.
மனைவி குத்திக் கொலை
இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் 02 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவன் கைது
கொலையை செய்த சந்தேகநபரான கணவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தால் சிறை அதிகாரியின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
