கொழும்பில் மனைவியை அடித்து கொன்ற கணவர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால்வாயில் வீசப்பட்ட சடலம்
இதன்படி பெண் கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது சடலம் அருகில் உள்ள கால்வாயில் கொண்டுச்சென்று வீசப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.
65 வயதான அந்தப் பெண், வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
