சி.வி விக்னேஸ்வரன் மீது ஆளும் தரப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சி.வி விக்னேஸ்வரன் 5 வருடங்கள் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்தும் வடக்கு மக்களுக்கு எந்த சேவையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என ஆளும் தரப்பின் அமைச்சர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மானிப்பாய் - தொட்டிலடி பகுதியில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தமது அரசாங்கத்திடம் பெரிய திருடர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கில் பாதை புனரமைப்புக்காக 100 மூடைகள் சிமெந்தினை பெற்றுக்கொள்ள ஒப்பந்தமிட்டு அதில் 25 மூடைகளுக்கான பணத்தை சட்டைப்பைகளில் போட்ட அரசியல்வாதிகளும் இங்கேயே உள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி
மேலும் இலங்கையின் பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்திதான் என்றும் தமிழரசுக் கட்சி அல்ல எனவும் கூறியுள்ளார்.
செய்தி தீபன்