இந்திய - பாகிஸ்தான் பதற்றநிலைக்கு மத்தியில் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
இந்தியாவுடன் நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு அதிநவீன PL-15 ஏவுகணைகளை சீனா அவசரமாக வழங்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான PL-15 ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் விமானப்படை, தற்போது தனது புதிய JF-17 Block III போர்விமானங்களில் PL-15 Beyond Visual Range (BVR) ஏவுகணைகளை களஞ்சியப்படுத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
நேரடியாக வழங்கல்
இந்த ஏவுகணைகள் சீன விமானப்படை இருப்பிடங்களில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
PL-15 ஏவுகணைகள், 200 - 300 கிமீ வரையான மிக நீண்ட தூரத்தை அடையக்கூடியவை. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை (IAF) அதிக தொலைவில் இருந்து தாக்கும் திறனை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சீனாவின் PL-15, அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஐரோப்பியாவின் Meteor ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படுகிறது.
Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் ஏற்றியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் திட்டம்
இந்த அபாயத்திற்கு எதிராக, இந்திய விமானப்படை ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறது. இந்த ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்க முடியும்.
இதற்கிடையில், இந்தியா தனது உள்நாட்டு அஸ்திரா (Astra) Mk-III திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. புதிய அஸ்திரா ஏவுகணை 340 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு வலிமையை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
