நூற்றுக்கணக்கான சிறைக்காவலர்கள் சேவையிலிருந்து விலகல்
சிறைக்காவலர்கள் பலர் சம்பள அதிகரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகளினால் சேவையிலிருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை வரலாற்றில் இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினை இதற்கு முன் எழுந்ததில்லை என்று கூறப்படுகிறது.
கடும் மன உளைச்சல்
குறித்த பிரச்சினையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் சேவையை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் கூட இந்த சம்பளப் பிரச்னையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் ஓய்வூதியத்துக்காக, சிரமங்கள், பிரச்சினைகளை பொறுத்துக் கொண்டு, பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், பெருமளவிலான சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில், அதிகளவான ஒழுங்குமுறை உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து விலகிச் செல்வது சிறைச்சாலை திணைக்களத்திற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
