கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியிலிருந்து ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு
கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்த ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ”ஜெனிவாவிற்கு அப்பால்” எனும் மூன்றாவது கலந்துரையாடலின் நிறைவில் ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவிற்கு அப்பால் என்கின்ற எமது மூன்றாவது கலந்துரையாடல் நீண்ட வாதபிரதிவாதங்களிற்கு மத்தியில் ஓர் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விடயம். கடந்த பல ஆண்டுகளாக கோட்பாடு ரீதியாக ஒருமித்த கொள்கையுடைய தமிழ்க் கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களும்,ஒருங்கிணைந்து ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் என்கின்ற பல கூட்டங்களும், பல முயற்சிகளும், பல சந்திப்புக்களும் இன்றைய நாளிலே வெற்றி பெற்றிருக்கிறது.
புள்ளிக்கு வருவதற்கு ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். பிரதானமாக மூன்று அரசியல் கட்சிகளிற்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். மேலும் திருமலை மாவட்ட ஆயர், மத குருமார், சிவில் அமைப்புக்கள்,கருத்தியலாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் நன்றி கூறுகின்றோம்.
கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்த ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களினுடைய இவ்வாறான பிணக்குக்களில் மூன்று கட்சிகளும் ஒருமித்த நிலையில் ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் எனவும், இவ்வாறான விடயங்களிற்கு அனைவரும் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதென்பது சாதாரண விடயமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri