சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் குழுவினர் விஜயம்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை நேற்று (05.07.2024) மேற்கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக சமூக பொருளாதார சமூக உரிமைகளில் ஒன்றான சுகாதார உரிமைகளை மக்கள் அனுபவிப்பதை, அணுகுவதை உறுதி செய்யுமுகமாக இந்த களவிஜயம் அமைந்திருந்தது.
குறிப்பாக இன்றையதினர் விடுதிகளில் நோயாளர்கள் எவரும் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் எம்மால் இன்றைய களவிஜயத்தில் பெற்றுக்கொண்ட பல அவதானிப்புகள் தொடர்பில் எதிர்வரும் 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை எமது அலுவலகத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
