மியன்மார் அகதிகளைச் சந்திக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு

Human Rights Commission Of Sri Lanka Refugee Mullaitivu Myanmar
By Aanadhi Dec 30, 2024 05:52 AM GMT
Report

முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மியான்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி

அகதிகளை பார்வையிட அனுமதி 

இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.

மியன்மார் அகதிகளைச் சந்திக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு | Human Rights Commission Denied Myanmar Refugees

குடிவரவு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் உத்தரவின் பிரகாரமே புகலிடக் கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

ஆராய வேண்டிய பொறுப்பு

மியன்மாரில் இருந்து வருகை தந்துள்ள அகதிகளில் 40இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மியன்மார் அகதிகளைச் சந்திக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு | Human Rights Commission Denied Myanmar Refugees

நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் தடையின்றி உரிய புகலிட கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய இராணுவத் தளபதி நியமனம்

புதிய இராணுவத் தளபதி நியமனம்

விரைவில் நடைமுறைக்குவரவுள்ள அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம்!

விரைவில் நடைமுறைக்குவரவுள்ள அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US