இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 150 ரூபாவிற்கு குறைவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் வரி விதிக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலையாக கிலோ ஒன்று 230 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு இரண்டு முதல் பத்து ரூபாவாக காணப்பட்டதாகவும் மக்களுக்கு சலுகை விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் அல்லது 45 வீத வரி அறவீடு செய்யப்படுவது தேசிய மக்கள் சக்தியை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam