புதிய இராணுவத் தளபதி நியமனம்
புதிய இணைப்பு
இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொடரிகோ இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவை நீடிப்பு நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுபவமிக்க இராணுவ அதிகாரி
அனுபவமிக்க இராணுவ அதிகாரியான, மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றினார்.
அத்துடன் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றினார்.
இதேவேளை, தற்போதைய இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக தனது இரண்டாவது தவணை சேவை நீடிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
