மூதூர் - சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு

Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee
By Kiyas Shafe Jul 23, 2025 10:22 PM GMT
Report

மூதூர் - சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி, குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியாடியுள்ளார்.

ஈழத்தமிழரை இலக்கு வைத்து செப்டெம்பர் மாதத்தில் திரைமறைவில் பெரும் சர்வதேச சதி

ஈழத்தமிழரை இலக்கு வைத்து செப்டெம்பர் மாதத்தில் திரைமறைவில் பெரும் சர்வதேச சதி

நீதிபதி உத்தரவு

சட்ட வைத்திய அதிகாரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பெளசான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மெக் என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

ஜூலை படுகொலையின் 42 ஆவது நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஜூலை படுகொலையின் 42 ஆவது நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பொலிஸாரின் பாதுகாப்பு

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த இடத்தை பார்வையிட்ட பின், மிதிவடி அகற்றும் பணியை 23ஆம் திகதிவரை இடைநிறுத்தி வைக்குமாறும், நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவு விடப்பட்டிருந்ததுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

மூதூர் - சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு | Human Remains Found In Sampur Graves

அந்தவகையில் குறித்த பகுதிக்குள் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது.

மூதூர் - சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு | Human Remains Found In Sampur Graves   

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US