யாழில் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பனங்கட்டிக்குட்டான் விற்பனை அமோகம்
உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு,
யாழ்ப்பாணத்தில் பெரிய பனங்கட்டி குட்டான் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம்
காட்டிவருகின்றனர்.
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ். நகர் பலசரக்கு கடை, மற்றும் சந்தைப்பகுதி களிலும் மக்கள் பொருட்கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம்காட்டிவருகின்றனர்.
பனங்கட்டி குட்டான்
அந்த வகையில், யாழ். நல்லூர், திருநெல்வேலி சந்தையிலும் பலசரக்கு வியாபார நிலையங்களிலும் ஆடிப்பிறப்புக்கான ஆடிக்கூழ் காச்சுவதற்காக பனங்கட்டி குட்டான், பயறு, அரிசி, மா, கஞ்சான், கஜூ, ஏலக்காய், பிளம்ஸ், முந்திரிவத்தல் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி, யாழ். நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140, ரூபாவுக்கும் சிறிய பனங்கட்டி குட்டான் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என பனங்கட்டி குட்டான் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 38 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
