சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு தங்கம்! வெளியான இலங்கை மதிப்பு
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் பகுதியில் 1000 மெட்ரிக் டொன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் மதிப்பு சுமார் 78 பில்லியன் யூரோ(27.38 ட்ரில்லியன் இலங்கை ரூபா) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2,000 மீட்டர் ஆழத்தில் 300 டொன் தங்கமும் 3,000 மீட்டர் மேலதிகமான தங்கமும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்க சுரங்க மையம்
3D நிலவியல் மாதிரிகள், ஆழமான துளையிடல் மற்றும் புவியியல் படிமங்கள் ஆகிய உயர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மேலும் பல வளங்களும் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பால் ஹுனான் மாகாணம், முக்கிய தங்க சுரங்க மையமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக இருக்கும் சீனாவின் உலகளாவிய தாக்கம், இந்த கண்டுபிடிப்பால் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam