அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: ஈராக்கின் தீ விபத்து அதிர்ச்சி தகவல்
ஈராக் நாட்டில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்த திருமண விழாவில் பங்கேற்ற 100ற்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஈராக் - நினிவே மாகாணத்தில் உள்ள சுகாதாரத்துறை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 114 என உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு ஈராக்கில் அல்-ஹம்தானியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிறிஸ்தவ திருமண நிகழ்வு இடம்பெற்றிருந்த நிலையிலே இந்த சோக சம்பவம் பதிவாகியிருந்தது.
மருத்துவ சிகிச்சை
குறித்த நிகழ்வின் போது திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அங்கு மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிகளுக்கும் தீ பரவியதால் இந்த விபத்தில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 150 பேர் தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அந்நாட்டு அதிகாரிகளின் அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
