யாழில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு
உலகின் அதி அபாயகரமான போதைப்பொருள் என்று கருதப்படும் 94 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பருத்தித்துறையில் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ள நிலையில்,
அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.