ஐ.நா. அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய இலங்கை வீரர் திடீர் மரணம்
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப் பிரிவில் கடமையாற்றிய இலங்கை படைவீரர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மாலி நாட்டில் கடமையாற்றி வந்த குறித்த இலங்கை படைவீரர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மதவச்சி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜீ.எல்.தேசப்பிரிய என்ற லான்ஸ் கோப்ரல் ஓருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
43 வயதான குறித்த படைவீரர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி சென்ற படைவீரர்
கடந்த 2022ம் ஆண்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி சென்ற குறித்த படைவீரர், இந்த நாட்டில் நாடு திரும்பவிருந்தார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக குறித்த படைவீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த படைவீரரின் சடலம் நாளைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
