5000 மெற்றிக் தொண் நெல்லை பெறும் வழி: குகதாசன் எம்.பி விளக்கம்
அரிசி உற்பத்தியில் தன்னிறைவு காணும் பொருட்டாக திருகோணமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குளங்களை இந்த ஆண்டில் மறுசீரமைத்து அபிவிருத்தி செய்தால் 5000 மெற்றிக் தொண் நெல்லை பெறலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இன்று(26.02.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“1985ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் கைவிடப்பட்டுள்ள 205 சிறு குளங்களில் ஐம்பதையும் கைவிடப்பட்டுள்ள அனைக்கட்டு 25இல் ஐந்தையும் இந்த ஆண்டில் அபிவிருத்தியடைய செய்தால் நன்மைகளை பெறலாம்.
அபாய நிலையில் பாலம்
இது போன்று யான் ஓயா அணைக்கட்டில் இருந்து நீலபணிக்கன் குளத்துக்கு நீர் வழங்குவதன் ஊடாக ஒரு முறை நெற் செய்கை மேற்கொள்ளப்படும்.

3000 ஏக்கர் நிலத்தினை இரு போகமும் செய்கை பண்ண முடியும் என்பதுடன் இதன் மூலமாக 7000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை பெறலாம்.
பாலம்போட்டாறு பகுதியில் உள்ள பத்தினிபுர அனைக்கட்டின் சில கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதால் நீர் வீண் விரயமாக்கப்படுகிறது.

இதனை சீர் செய்ய வேண்டும். மேலும் மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள கட்டை பறிச்சான் இறால் பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை புனரமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri