யாழ்ப்பாணம் - சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும்.
அடுத்த வாரம் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை. பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்தமலானை விமான நிலையத்திற்கும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனா காலப்பகுதில் தடைப்பட்ட விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் ளெியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri