யாழில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற செவ்வந்தியின் இரகசிய பாதை
சஞ்சீவ படுகொலைக்கு பின்னர், நாட்டிலிருந்து தப்பி சென்ற செவ்வந்தி பயன்படுத்திய இரகசிய பாதை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவல் இதுவரை அதிகாரிகளால் உறுதிபடுத்தப்படாத போதும் குறித்த பாதையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.
அந்தவகையில், குருநகர் கடற்பகுதி ஊடாக பயணித்த செவ்வந்தி, ஊர்காவற்துறை கடற்பகுதிக்கு சென்று அங்கிருந்து பயணத்தை மேற்கொண்டிருப்பதற்கு தான் அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்காணிப்பற்ற பகுதி
ஊர்காவற்துறையில் இருந்து தலைமன்னார் வழியாக பயணம் மேற்கொண்டிருப்பாராக இருந்தால், செவ்வந்தி இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
எனவே, ஊர்காவற்துறை ஊடாக பயணிக்கும் போது, தொண்டிக்கடற்கரை அல்லது கோடிக் கடற்கரை வழியாக பயணம் மேற்கொண்டிருந்தால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு குறைவு.
காரணம் குறித்த வழியில் செல்பவர்கள் தனுஸ்கோடிக்கு செல்வதை தவிர்த்து தொண்டிக்கடற்கரை அல்லது கோடிக் கடற்கரை வழியாக செல்வர்.
அந்தவகையில், குறித்த பகுதிகளில் அதிகளவு கண்காணிப்பு இருப்பதில்லை. ஆனால், தலைமன்னார் வழி செல்லும் அனைவரும் பெரும்பாலும் கைது செய்யப்படுவார்கள்.
எனவே, செவ்வந்தி அவ்வழியில் செல்லாமல் தொண்டிக்கடற்கரை அல்லது கோடிக் கடற்கரை வழியே சென்றிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




