இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தில் வைத்து சுட்டுப் படுகொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் மற்றும் கிளைநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri