செங்கடல் பகுதியில் இலக்குவைக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்: தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்
செங்கடல் பகுதியில் நிலவும் பதற்ற நிலைக்கு மத்தியில் பிரித்தானியாவுக்கு சொந்தமான கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடல் பகுதிக்கு உற்பட்ட ஹெடெய்டாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்வர்த்தகம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதல்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளன கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அந்தபகுதியில் சிறிய கப்பல் ஒன்று காணப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானப்படகுகளையே அமெரிக்கா தாக்கியுள்ளது.
யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் வெடிமருந்து நிரம்பிய ஆளில்லா விமானப்படகுகளை அமெரிக்க படையினர் கண்டுபிடித்திருந்தனர்.
இதன் காரணமாகவே தாக்குதலை மேற்கொண்டதாகவும், இவை அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும் வர்த்தககப்பல்களிற்கும் ஆபத்தாக காணப்பட்டன எனவும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri