வங்கி வட்டி விகிதம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
எதிர்காலத்தில் பணவீக்கம் 5 விகிதமாக இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களால் வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம், வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்க வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் வரிக் கொள்கையின் மூலம் அரசாங்க வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் இது குறித்து நான் கூறுவது சரியல்ல.
இது அரச நிதிக் கொள்கை, நாடாளுமன்றம், திறைசேரி ஆகியவற்றின் செயற்பாடாகும். அரசின் வருமானத்தை அதிகரித்துக் கொண்டால் அதன் பலனை மக்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு அதிகரித்த வருமானத்தை அத்தியாவசிய விடயங்களுக்கு எவ்வாறு ஒதுக்குவது என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
ஒற்றை இலக்க வங்கி வட்டி விகிதம்
எதிர்காலங்களில் வங்கி வட்டி விகிதத்தினை தனி இலக்கத்திற்குள் கொண்டு வர முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது. வட்டி விகிதங்கள் தங்கியிருப்பது பணவீக்கத்தின் அடிப்படையிலாகும்.
எதிர்காலத்தில் பணவீக்கம் 5 விகிதமாக இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களால் ஒற்றை இலக்க வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்போது பணவீக்கம் 6.4%. ஆனால் பணவீக்கம் 5% ஆக நிலையானதாக இருக்க வேண்டும். அதுவே எங்களின் இலக்காகும்.
அந்தக் குறிக்கோளைக் கடைப்பிடித்தால், நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அரசின் வருவாய் அதிகரிப்புக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |