ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தீவிரம் - பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவிற்கான தனது பயண எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்த அறிவிப்பு இன்று(12.010.2026) வெளியிடப்பட்டுள்ளது.
ஜெத்தா தம்மாம் மற்றும் ரியாத் மன்னர் காலித் பன்னாட்டு விமான நிலையம் உட்பட சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் (மதீனா பன்னாட்டு விமான நிலையம் தவிர) அவசியமான தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு, மேம்பாட்டு அலுவலகம் பயணிகளுக்கு (FCDO) அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அத்துடன், நேற்றுமுன்தினம்(10.10.2026) அன்று ரியாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிர பாதுகாப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அது முழுமையாகப் பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை பிரித்தானிய குடிமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற விரும்பும் பிரிட்டன் நாட்டவர்கள், விமானம் மூலம் செல்வதற்குப் பதிலாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஜோர்தானுக்குத் தரைக் வழியாகப் பயணம் செய்து, அதன் பின் அங்குள்ள விமான நிலையங்கள் மூலம் தங்கள் நாடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam