அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் கண்காணிப்பு விமானம் மீது யேமனில் உள்ள ஹவுதி(houthi) கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
செங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஏவுகணை மூலம் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தும் காணொளியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காசா மீதான போர்
காசா மீதான போர் ஆரம்பித்ததில் இருந்து யேமன் மீது அல்லது அதற்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்ட நான்காவது அமெரிக்க ஆளில்லா விமானம் இதுவாகும்.
مشاهد إسقاط الدفاعات الجوية اليمنية طائرة MQ-9 الأمريكية أثناء قيامها بأعمال عدائية في أجواء محافظة مأرب 17-05-2024م pic.twitter.com/fvRBBD4H3T
— الإعلام الحربي اليمني (@MMY1444) May 17, 2024
இறுதியாக ஏப்ரல் மாத பிற்பகுதியில் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
போருக்கு எதிராக செங்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட பல ஒருவழி ஹவுதி ட்ரோன்களைப் போலல்லாமல், மேம்பட்ட அமெரிக்க ட்ரோன்களின் விலை 30மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |