செங்கடலில் தொடரும் பதற்றம் : சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், செங்கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது கடந்த 21ஆம் திகதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
நடத்தப்பட்ட தாக்குதல்
இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் 30 பேரை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டதோடு, 1 மில்லியன் எண்ணெய் தாங்கிகளுடன் பயணித்த அந்த கப்பல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், செங்கடலில் ஏற்கனவே கைவிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல் மீதும் மற்றொரு சரக்கு கப்பல் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று(02) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் கப்பல் மீதோ, மாலுமிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியுள்ளது.
தீப்பற்றியுள்ள கப்பலில் 1 மில்லியன் எண்ணெய் தாங்கிகள் இருப்பதால் ஒருவேளை கப்பல் முழுவதும் தீ பரவும் பட்சத்தில் கடற்பரப்பில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த கப்பலில் பற்றியுள்ள தீயை அணைக்க இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |