யேமன்- சாப்வா மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதல்! 18இற்க்கும் மேற்பட்டோர் பலி
யேமன்- சாப்வா மாகாணத்தில் உள்ள அரச ராணுவப் பயிற்சி முகாம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்றையதினம்(19.10.2026) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக் படைகளின் ஆதரவுடன் இயங்கும் யேமன் அரசாங்கத்திற்கும், தலைநகர் சனா மற்றும் வடக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உருவான பரந்த பிராந்திய மோதலின் மற்றொரு முனையாக இந்த சண்டை மாறியுள்ளது.
தீவிர தாக்குதல்
இந்த மாத ஆரம்பத்தில் பாப் எல்-மந்தேப் நீரிணைக்கு அருகில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டெடுக்க அரசப் படைகள் தீவிர தாக்குதல்களை ஆரம்பித்தன.

முன்னதாக, 2014இல் ஹ_திகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தொடங்கிய யேமனின் உள்நாட்டுப் போர், 2022இல் ஏற்பட்ட போர்நிறுத்தம் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.