பிரான்ஸில் தொடரும் கலவரம் : உள்துறை அமைச்சரின் பதவி விலகலை நிராகரித்த மக்ரோன்
பிரான்ஸில் வார இறுதியில் வெடித்த தீவிர கலவரங்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனெஸ் (Laurent Nunez) வழங்கிய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் நிராகரித்துள்ளார்.
நாட்டின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பாதுகாக்க அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடும் கோபம்
கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிய அணுகுமுறைகளை உடனடியாக உருவாக்குமாறு அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவு உயர்வு, வீழ்ச்சியடைந்து வரும் அரசுச் சேவைகள் மற்றும் பாடசாலைகளின் நிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடும் கோபமே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாகும்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் வெடித்த போராட்டங்கள் கலவரமாக மாறியதில், ஒரு நகர சபை கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வியாபாரத் தளங்கள் சூறையாடப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமையும் பாரிஸ் மற்றும் மார்செய் நகரங்களில் பொலிஸாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.