இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள்

Sri Lankan Peoples India Tamil
By Dharu Aug 21, 2023 03:43 PM GMT
Report

நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், தெரியவருகையில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் 24 மாதிரிக் கிராமங்கள்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் | Housing Scheme In India Loans

மாத்தளை, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய கிராமங்களில் வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2400 ஆகும்.

எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்திய உதவி வீட்டுத் திட்டம் பல கட்டங்களில் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வீடமைப்புத் திட்டம் முதலாவது திட்டமாகும்.

அங்கு, ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகள் கொண்ட மாதிரி கிராமம் கட்டப்படும். இதன் கீழ் நாடளாவிய ரீதியில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இரண்டாவது திட்டம் வட மாகாணத்தில் இந்திய உதவி வீட்டுத்திட்டம் ஆகும்.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி 24 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும். இதன் கீழ் கட்டப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 600 ஆகும்.

மூன்றாவது திட்டம் தென் மாகாணத்தில் இந்திய உதவி வீட்டுத் திட்டம். கிராமசக்தி வீட்டுத் திட்டம் என்று பெயரிடப்பட்ட இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசு வழங்கும் நிதி

மொத்தம் 52 மாதிரி கிராமங்கள் கட்டப்பட உள்ளன. இதன் கீழ் கட்டப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1,200 ஆகும். இந்த திட்டம் இந்திய அரசு வழங்கும் நிதியில் செயற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1200 மில்லியன் ரூபாவாகும். அதில் 780 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் | Housing Scheme In India Loans

நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் 419 மில்லியன் ரூபா வீடுகளுக்காக பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா மற்றும் திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 100,000/= உதவித் தொகையாக மொத்தம் 6 இலட்சம் ரூபா மீளப்பெற முடியாத அடிப்படையில் வழங்கப்படுகிறது.” என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US