வீடமைப்பு உதவித்தொகை ஆளுநர் தலைமையில் வழங்கி வைப்பு!
திருகோணமலையில் முதல் கட்டமாக, வீட்டு வசதி உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, ஆளுநர் அலுவலகத்தில் மூன்று இலட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள காசோலைகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கி வைத்துள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று(24.06.2026) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைப்பெற்றுள்ளது.
உயிரிழப்புக்கள் 100,000ஐத் தாண்டக்கூடும்! வெனிசுலா நிலநடுக்கம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
வீட்டு வசதி உதவித்தொகை
இந்தத் திட்டமானது மாகாணத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில், முதல் கட்டமாக 34 பயனாளிகளுக்கு வீட்டு வசதி உதவித்தொகை காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எதிர்காலத்தில் மீதமுள்ள பயனாளிகளுக்கும் காசோலைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண வீட்டு வசதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். சுகுமாரன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.


