30 வீடுகள் உடைத்து கொள்ளை: பொலிஸ் விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்
மட்டக்களப்பு - வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களில் 30 வீடு உடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 28 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனையில் வைத்து நேற்று (04.11.2023) கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட மடிக்கணனி மற்றும் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த ஜூலை மற்றும் மே மாதங்களில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - கண்ணகி அம்மன் வீட்டினுள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
வீதியில் பூட்டிவிட்டு உறவினரது வீடுகளுக்கு சென்று இரண்டு 3 தினங்களில் வீடுகளுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்து மடிக்கணனி தங்க மோதிரம், பணம், மற்றும் இலத்திரணியல் பொருட்கள் திருட்டுப்போயுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினரால் இடம்பெற்றுவந்த விசாரணையின் அடிப்படையில் வாழைச்சேனை ஹாயிரா பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை நேற்று வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர் வெலிகந்தை தொடக்கம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் சுமார் 30 மேற்பட்ட வீடு உடைத்து கொள்ளையுடன் தொடர்புடையவர் எனவும் பல வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.