இந்தியாவில் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்
தமிழகத்தின் 13 மாவட்டங்களில், மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்பட்ட 1591 வீடுகளை வழங்கும் விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது வேலூரில் உள்ள மேல்மனூர் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் நடைபெற்றது.
இந்த வீடுகள் இந்திய ரூபாய் மதிப்பில் 79.70 கோடி ரூபாய் (சுமார் 300 கோடி இலங்கை ரூபாய்) செலவில் கட்டப்பட்டுள்ளன.
புதிய வீடுகள்
மேலும், 29 மாவட்டங்களில் 104 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள பாழடைந்த வீடுகளுக்கு பதிலாக 7469 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கான 3510 வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 1591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri