ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மகிந்த கட்சியின் விளம்பரத்தால் சர்ச்சை
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளம்பரத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி நேற்று(17.09.2023) கொழும்பில் நடைபெற்றது.
போட்டியின் ஒவ்வொரு ஓவர் முடிவிலும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி விளம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
மகிந்தவின் விளம்பரம்
இதனால் அதனை பார்வையிட்ட பார்வையாளர்கள் கடும் கோபத்தை வெளியிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மேலும் போட்டியின் போது பொதுஜன பெரமுன தனது அரசியல் திட்டத்தின் பல விளம்பரங்களை ஒளிபரப்பியது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்சசை கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தம்மை பிரபலப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் மகிந்த அணியினரை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam