மலையகத்தில் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனது.
குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியினை கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினா அறுவடைக்கு தயாரான மரக்கறி வகைகள் பாதிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.
விவசாய நிலங்களுக்கு அழிவு
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்யும் மழைக்காரணமாக நுவரெலியாவில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |