நகரசபை உறுப்பினர் வீட்டை உடைத்து கொள்ளை! புராதன பொருட்கள் மீட்பு (Video)
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் அப்துல் மஜீதின் வீட்டை கொள்ளையிட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான றஊப் அப்துல் மஜீதினின் கடற்கரை வீதியிலுள்ள வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பெறுமதிமிக்க பொருட்கள்
குறித்த வீட்டை பூட்டிவிட்டு சென்று இரு தினங்களின் பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவை உடைத்து பெறுமதிமிக்க வெண்கலத்திலான கழுகு சிலை மற்றும் மின்பிறப்பாக்கி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களை கடையொன்றில் விற்பனை செய்த நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள்
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தலைமையில் கருணாரட்ன, ஜெயசிங்க, சாணக தனோஜன், சந்திரதாச ஆகிய பொலிஸ் குழுவினரே சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதான நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.








