அம்பாறையில் திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation Crime
By Farook Sihan Mar 01, 2025 12:03 PM GMT
Report

அம்பாறை(Ampara) மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் சுமார் 4 1/2 பவுண் தங்க நகைகள் உட்பட பணம் கடந்த வியாழக்கிழமை(27) இரவு திருடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (28) வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா..! ஒரு வாரத்துக்குள் அரசு பதில்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா..! ஒரு வாரத்துக்குள் அரசு பதில்

நகை மற்றும் பணம் திருட்டு

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸ் அணி ஒன்று புலனாய்வு மற்றும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறையில் திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை | House Robbed Gold Cash Stolen

மேலும் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் குடும்பமாக அருகில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் திடீரென தமது கையடக்க தொலைபேசி ஒன்றினை தேடிய நிலையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த அறை கதவு திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள தகவல்

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள தகவல்

திருடர்களின் நடமாட்டம்

பின்னர் வீட்டின் நிலைமையினை பரிசோதனை செய்த போது வீட்டின் மேல் மாடியில் இருந்த கதவு அகற்றப்பட்டு அலுமாரியில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

அம்பாறையில் திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை | House Robbed Gold Cash Stolen

உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிசார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US