மிரிஹான பிரதேசத்தில் வீட்டு வாடகை அதிகரிப்பு: காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
மின்சாரத் தடையற்ற மிரிஹான பிரதேசத்தில் வீட்டு வாடகை தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
எனினும் மிரிஹான பிரதேசத்தில் 24 மணித்தியாலங்களும் மின்சார விநியோகம் இடையறாது வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகைத் தொகையை அதிகரித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மிகவும் அத்தியாவசியமான தேவைகளை உடைய பகுதிகள் மற்றும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்படுகின்றது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



