குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அமைச்சர் அறிவிப்பு
மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டமொன்றை கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்டம்
மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களில் வசிக்கின்றவர்களை புனர்வாழ்வளித்து வசதிகளுடன் கூடிய நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்ட முறையில் வீடுகளில் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கமைய நடைமுறைப்படுத்தப்படும் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்திற்கான உதவித்தொகையாக 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதற்கு சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திடல்
ஒட்டுமொத்த கருத்திட்டத்தின் கீழ் காணி அபிவிருத்தி செய்தல் மற்றும் வேலைத்தளத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.
அதற்கமைய, சீனக் குடியரசுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |