லண்டனில் வெடித்து சிதறிய வீடு - நான்கு வயது சிறுமி பலி
தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் வீட்டில் இன்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வெடிப்பு சம்பவத்தை அடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மேலும் 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
07:00 மணி நேரத்திற்குப் பின்னர் மிட்சம், கல்பின்ஸ் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாகப் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
"லண்டன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், நான்கு வயது சிறுமி என நம்பப்படும் குழந்தையின் சடலம் கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஆதரிக்கப்பட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை காலை 7 மணிக்குப் பிறகு தோர்ன்டன் ஹீத்தின் கால்பின்ஸ் சாலையில் உள்ள தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்களும் சுமார் 40 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டனர்.
அருகில் வசிக்கும் குடோயா குகந்தா, 50, மற்றும் டெல்ராய் சிம்ஸ், 62, ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மூன்று குழந்தைகளை மீட்க உதவியதாக தெரிவித்தனர். தான் தூங்கிக் கொண்டிருந்தபோது குண்டு போன்ற சத்தம் கேட்டதாக குகந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
