யாழ். புத்தூரில் வீடொன்று தீக்கிரை
யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று இரவு 8.30 மணியளவில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து காணி வாங்குவதற்காக வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பால் கூறப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் முற்று முழுதாக வீடு எரிந்து நாசமாகியுள்ளது.

இதற்கமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam