மட்டக்களப்பு யாழ்ப்பாணம் பகுதிகளில் திருடர்கள் கைவரிசை! பெறுமதியான பொருட்கள் திருட்டு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் 5 வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை - செம்மண்ஒடை பிரதேசத்தில் சம்பவத்தினமான நேற்று முன் தினம்(11.09.2022) வீட்டை பூட்டிவிட்டு வீட்டில் உள்ளவர்கள் சிறுவர் பாடசாலை நிகழ்வொன்றிற்காக சென்றுள்ளனர்.
நிகழ்வு முடிந்து வீட்டார் வீடு திரும்பிய போது, பூட்டியிருந்த வீட்டின் யன்னலை உடைத்து திருடர்க உட்புகுந்து அங்கிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த சனிக்கிழமை ஓட்டுமாவடியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து அங்கிருந்த ஏ.டி.எம். வங்கி அட்டையை திருடி சென்று குருநாகல் பகுதியில் வங்கி அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுமதியான பொருட்கள் திருட்டு
இதனை தொடர்ந்து, நாவலடி பிரதேசத்தில் பிரதேச சமுர்த்தி தலைவர் ஒருவரின் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த கையடக்க தொலைபேசி, 32000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இன்னொரு வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த கையடக்க தொலைபேசி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் இரு தினங்களில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வல்வெட்டித்துறை
யாழ். வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் நேற்றுமுன் தினம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த வேளை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு
11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19000 ரூபாய் பணம் என்பனவே திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதை மூடிவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது அறியப்படுகின்றது.
வல்வெட்டித்துறை பொலிஸ் தடயவியல் பிரிவு, சம்பவ இடத்தில் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
