விடுதலைப்புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்! வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள்

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples
By Chandramathi Jul 12, 2023 10:31 PM GMT
Report

முல்லைத்தீவில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட பகுதியில் கொட்டில்களை அமைத்து மக்கள் குடியேறியுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

விடுதலைப்புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்! வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள் | House Breaking And Attack On Women At Mullaitivu

இந்நிலையில் நேற்று (12.07.2023) குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொளுத்துவதற்காக மண்ணெண்ணெயுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வனவள திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணெய்யை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்! வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள் | House Breaking And Attack On Women At Mullaitivu

அத்துடன் குறித்த பகுதி கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள்.

அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை. அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை.

எங்களால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இதேவேளை குறித்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை (10.07.2023) ஒன்பது பேர் வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்! வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள் | House Breaking And Attack On Women At Mullaitivu

அத்துடன் நேற்று(12.07.2023) ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் இன்று(13.07.2023) முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்துள்ளனர்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது அந்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் அங்கிருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்! வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள் | House Breaking And Attack On Women At Mullaitivu

இவ்வாறான நிலையில் அந்த கிராம மக்கள் 2012 ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்.

இந்த பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள் கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US