அநுர அரசின் அதிரடி நடவடிக்கை - கொழும்பில் சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற நடவடிக்கை
கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த ஹோட்டல்கள் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டவிரோத ஹோட்டல்
இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இடித்து அகற்றுவதற்கு கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த கடற்கரை பகுதிகளை மிகவும் உணர்திறன் வாய்ந்த மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20