நாட்டில் 10 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன! அசேல சம்பத்
நாட்டில் சுமார் 10 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 40000த்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இயங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
முட்டை விலை
ஹோட்டல்களுக்கு மக்கள் வருகை தருவதிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் போதியளவு முட்டை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர்கள் கூறினாலும் உண்மையில் அவ்வாறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விலைக்கு முட்டை விற்பனை செய்வதாகவும், 60 முதல் 65 ரூபா வரையில் விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
