இலங்கையர்களிடமிருந்து டொலர் கொடுப்பனவுகளை ஏற்க ஹோட்டல்களுக்கு அனுமதி!
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு, இலங்கையர்கள் அமெரிக்க டொலர்களில் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியுறவு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் வசம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை வங்கி முறைக்கு உள்ளீர்க்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் சேவைகளுக்கு இலங்கையில் வசிக்கும் நபர்களிடமிருந்து டொலர்களில் கட்டணம் செலுத்துவதை ஹோட்டல்களுக்கு அனுமதிப்பதன் மூலம் வர்த்தமானி ஒரு விதிவிலக்கு அளிக்கிறது.
முன்னதாக, ஹோட்டல்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களிடமிருந்து மட்டுமே டொலர் கொடுப்பனவுகளை ஏற்க அனுமதிக்கப்பட்டது,
தற்போது இலங்கையர்கள் அமெரிக்க டொலர்களில் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri