வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த நபர் - கடும் கோபத்தில் உறவினர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பனாகொட-போதிய சாலை, பலேதகொட முகவரியில் வசிக்கும் 53 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஜெயசிறி பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கால் விரலில் பாதிப்பு
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது கால் விரலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தலங்கம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு தலங்கம மருத்துவமனை தெரிவித்தது. அங்கு அனுமதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
பின்னர் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அனுமதிக்கப்படாததால், சிகிச்சைக்காக அதே நாளில் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
ஊழியர்களின் அலட்சியம்
ஆனால் இன்று வரை உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதற்கமைய, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்து விட்டார்.
மருத்துவமனை ஊழியர்களின் தவறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸ் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam