இலவச மருத்துவத்தை இழந்த நிலையில் இலங்கை மக்கள் : வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் (Photos)
மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டு நிலையினையும் வெளிக்காட்டும் முகமாக மாங்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “இன்று இலவச மருத்துவம் இழந்த நிலையில் இலங்கை மக்கள்” , “மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை,” ”மக்களின் உயிர்களுடன் விளையாட வேண்டாம்,” “மருத்துவப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்”,“இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது”, “அனைவரது உயிர்களும் ஆபத்தில் உள்ளன,” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
