மருந்து தட்டுபாட்டின் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள்(Photos)
மருந்து தட்டுபாட்டின் காரணமாக மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்று (07) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக நண்பகல் 12.30 மணிதொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது.மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் கண்டன பேரணியாக சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உள்ள முக்கியமான மருந்து பொருட்கள் இன்னும் இரண்டு
மாதங்களுக்கே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என மருத்துவமனை வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.









