சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் திகதி திறப்பு
சீனா அரசாங்கத்தின் நிதியுதவியில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 11 பில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலைக்கு சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில் 204 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதி சிறுநீர நோயாளிகளின் இரத்தத்தினை சுத்திகரிக்கும் 100 டயாலிசிஸ் இயந்திரம், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகூடம் உட்பட 5 நவீன ரக சத்திரசிகிச்சைகூடங்கள், நவீன வசதிகளுடனான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த வைத்தியசாலை கொண்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 21ஆம்
திகதி அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் சுமார் 20
மாத காலப் பகுதிக்குள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri