பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அடுத்த கட்ட முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் இன்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌஃபீக் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு அவரின் அலுவலகத்தில் இன்று(7) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் அண்மையில் Type A ஆக தரமுயர்த்தப்பட்ட பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அடுத்த கட்ட முன்னேற்றம் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
அதற்கிணங்க மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்கள் விரைவில் பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய ஆளனி வெற்றிடங்கள் குறித்து முடிவு செய்வதாகவும்,
நோயாளர் பதிவேட்டு முறைமையை கணினி மயப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை
ஆரம்பித்து வைப்பதாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.



